கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 13 ஆண்டுகளாக தொடாந்து “சென்னை அறிவியல் மாநகர விருது” பெற்று வருகிறது. இவ்விருது ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 28-ம் நாள் “தேசிய அறிவியல் தினமாக” கொண்டாடப்படுவது வழக்கம். அதனை நினைவு கூறும் வகையில் இவ்வாண்டும் சென்னையில் அமைச்சர் பெருமக்கள் முன்னிலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவியர்கள் ஆர்.அரவிந்த், எஸ்.கவின்பிரசாத், எஸ்.எம்.பூமிஷ், ஏ.எஸ்.ஹரிபிரசாத் 7-ம் வகுப்பு மற்றும் எஸ்.கங்கேஷ்வரா 6-ம் வகுப்பு ஆகியோர்களுக்கு சென்னை அறிவியல் மாநகர விருது 2016-ஐ அறிவியல் நகர துணைத்தலைவர் திரு.உ.சகாயம் I.A.S., அவர்கள் மாணவர்களுக்கு பரிசுகளையும், பணமுடிப்பையும் வழங்கி பாராட்டினார். மேலும விழாவில் திரு.பழனிச்சாமி, I.A.S., அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.