ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 29-வது பள்ளி
ஆண்டுவிழா 11.01.2020 அன்று மாலை மிக விமர்சையாக நடைபெற்றது.
விழாவில் பள்ளி நிர்வாகி திருமதி கீதாராணி தியாகராஜன் அவர்கள்
குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்கள்.
பள்ளித் தலைவர் திரு.A.K.C.தியாகராஜன் அவர்கள் விழாவிற்கு
வந்திருந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பள்ளி முதல்வர்
திரு.M.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஆண்டறிக்கை வாசித்தார். சென்னை
உயர்நீதிமன்றத்தின் நீதியரசர் மேதகு திரு.M.M.சுந்தரேஷ் அவர்கள் சிறப்பு
விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். விழாவிற்கு இந்திய
விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இணை இயக்குநர்,
உயர்திரு பொங்கினன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பள்ளியின் செயலாளர் திரு.K.செந்தில்நாதன் அவர்கள் மற்றும்
நிர்வாகக்குழு உறுப்பினர் A.K.குமாரசாமி அவர்கள் வாழ்த்துரை வழங்கிநர்,
சிறப்பித்தார்கள், கலைநிகழ்ச்சியை தமிழாசிரியர் திரு.N.R. இராசகுமாரன்
அவர்கள் ஒருங்கிணைத்து வழங்கினார். பொருளாளர் திரு.N.சந்திரசேகர்
அவர்கள் நன்றி நவில நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.