76-வது சுதந்திர தின விழா

சுதந்திர தின விழா கொண்டா டப்பட்டது. பள்ளியின்தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பள்ளி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்று பேசினார். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக 75 எண் வடிவில் மாணவர்கள், மாணவிகள் வரிசையில் நின்றது அனைவரையும் கவர்ந்தது. விழா வில் கவிஞர் ஜோதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பள்ளியின் செயலாளர் செந்தில்நாதன், பொருளாளர் சந்திரசேகர், தாளாளர் பாலசுப்பிரமணி, பள்ளியின் துணை தலைவர்கள் கருப்புசாமி, கீதாராணி தியாகராஜன், கிருஷ்ணசாமி, சுவாமியப்பன் உட்பட பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.