சுதந்திர தின விழா

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 76 ஆவது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது விழாவில் பள்ளித் தலைவர் திரு.A.K.C.தியாகராஜன் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். செயலாளர் திரு K.செந்தில்நாதன் மற்றும் பொருளாளர் திரு N.சந்திரசேகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். பள்ளி நிர்வாகிகள் திரு.K.பெரியசாமி, திரு.P.கிருஷ்ணசாமி, முதல்வர் M.கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆசிரிய ஆசிரியைகள், மாணவ மாணவியர்கள், பெற்றோர்கள், பள்ளி ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவை ஒட்டி பள்ளியின் மிகப்பெரிய மைதானத்தில் 760 மாணவ மாணவியர்களை கொண்டு தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களுடைய உருவ வடிவத்தில் மாணவர்கள் நின்று அலங்கரித்தனர். விழா நிறைவில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.